இருளில் மூழ்கியது வடக்கு மாகாணம் - காரணம் வெளியானது

இருளில் மூழ்கியது வடக்கு மாகாணம் - காரணம் வெளியானது

வட மாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் இன்று இரவு 7 மணியிலிருந்து மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர் கொண்டுள்ளனர்.

வட மாகணம் முழுவதும் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ளதனால் க. பொ. த சாதாரண தர பரீட்சை எழுதுவோர் உட்பட சிறுவர்கள் என அனைவரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

அநுராதபுரம் புதிய நகரில் உள்ள கிரிப் (Grip) மின் உபநிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

இதன் காரணமாக வட மாகாணத்திற்கு அப்பால் வாழைச்சேனை, ஹபரனை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.