உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர் சிறைச்சாலை அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முயற்சி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர் சிறைச்சாலை அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முயற்சி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் உள்ள இஜாஸ் அஹமட்டும் மற்றொரு சிறைக்கைதியும் இணைந்து, சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவருக்கு ஐந்து இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்க முயற்சித்துள்ளனர்.

இது தொடர்பில் இடைத்தரகராக செயற்பட்ட ஜெயிலர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும், சிறைச்சாலை பணிப்பாளர் (நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு), சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

தனக்கும் மேலும்  இரு போதைப்பொருள் கைதிகளுக்கும் சிறைச்சாலையினுள் வசதிவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அஹமட் என்ற சந்தேகநபரால் இவ்வாறு இலஞ்சம் வழங்க முயன்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்