பார்சிலோனோ கேப்டன் மெஸ்சி 700-வது கோல் அடித்து சாதனை

பார்சிலோனோ கேப்டன் மெஸ்சி 700-வது கோல் அடித்து சாதனை

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் லயோனல் மெஸ்சி. அர்ஜென்டினாவை சேர்ந்த இவர் ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா கிளப் அணியில் ஆடி வருகிறார். இந்த நிலையில் லயோனல் மெஸ்சி 700- வது கோலை அடித்து முத்திரை பதித்தார்.

ஸ்பெயினில் உள்ள லா லிகா கால்பந்து லீக் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் பார்சிலோனா - அட்லேடிகோ மாட்ரீட் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா-வில் முடிந்தது. இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணியின் கேப்டனான மெஸ்சி ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் பெனால்டி மூலம் கோல் அடித்தார்.

இது அவரது கால்பந்து விளையாட்டில் இது 700-வது கோலாகும். லயோனல் மெஸ்சி பார்சிலோனா அணிக்காக 630 கோலும் (724 ஆட்டம்), அர்ஜென்டினா அணிக்காக 70 கோலும் (138) அடித்துள்ளார். கால்பந்து போட்டிகளில் 700 -வது  கோலை அடித்த 7-வது வீரர்  என்ற என்ற பெருமையை மெஸ்சி பெற்றார்.

பீலே, ரொமாரியோ (பிரேசில்), ஜோசப் பிகான் (ஆஸ்திரியா), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுக்கல்), பெரன்க் புஸ்காஸ் (அங்கேரி), ஜெரார்டு முல்லர் (ஜெர்மனி)  ஆகியோர்  700 கோல்களுக்கு மேல் அடித்துள்ளனர். இதில் பிகான் 805 கோல் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

ஒரு கிளப்பில் அதிக கோல்கள் அடித்தவர் பீலே. அவர் ஒரு கிளப் அணிக்காக 643 கோல்கள் அடித்துள்ளார். பீலேயை முந்துவதற்கு மெஸ்சிக்கு இன்னும் 14 கோல்களே தேவை.