
இத்தாலியில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 30 இலட்சத்தை அண்மித்தது
இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தை அண்மித்துள்ளது.
இந்தநிலையில், கொவிட்-19 தொற்றுக்காரணமாக அங்கு இதுவரை 29 இலட்சத்து 99 ஆயிரத்து 119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா காரணமாக இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 339 பேர் பலியாகினர்.
இதற்கமைய அந்த நாட்டில் கொரோனா காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 98 ஆயிரத்து 974 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரசின் தாக்கமானது உலகின் பல நாடுகளில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3 ஆம் இடத்திலும் உள்ளது.
சர்வதேச ரீதியாக கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இத்தாலி 8ஆம் இடத்தில் உள்ளமை குறிப்பிடதக்கது