டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்தியா தடை – சீனா கவலை

டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்தியா தடை – சீனா கவலை

பாதுகாப்பு காரணங்களுக்காக 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது கவலை அளிப்பதாகவும் அது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் உள்ள 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என உளவுத்துறைகள் பரிந்துரை செய்தன.

இது தொடர்பாக பல கட்ட ஆலோசனைக்கு பின்னர், டிக் டாக், ஷேர் இட், பேட்டரி சேவர், ஹெலோ, யூகெம் மேக்கப், கிளீன் மாஸ்டர் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது

இந்நிலையில், இந்த விடயம் கவலையளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சீன வெளிவிவகார செய்தி தொடர்பாளர் ஹாவ் லிஜியான், இந்திய அரசின் நடவடிக்கைகள் கவலை அளிக்கிறது.

இந்த உத்தரவு குறித்து ஆராய்ந்து வருகிறோம். இந்தியாவின் சீனாவின் வணிகத்தை பாதுகாக்க வேண்டியது அந்நாட்டு அரசின் பொறுப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.