
வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாதவர்கள் மருத்துவர் மற்றும் மனைவி மீது கடும் தாக்குதல்
வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் வசிக்கும் வைத்தியர் ஒருவரது வீட்டிற்குள் புகுந்த இனம் தெரியாத நபர்கள் வைத்தியரையும் அவரது மனைவியையும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்றையதினம் இரவு குறித்த வைத்தியரின் வீட்டிற்குள் இரும்புக் கம்பிகளுடன் நுழைந்த நான்குநபர்கள் வைத்தியரையும் அவரது மனைவியையும் தாக்கிவிட்டு, அவரது இரண்டு தொலைபேசிகள், மோட்டார்சைக்கிள்திறப்பு, மற்றும் சிறுதொகை பணத்தினையும் எடுத்துசென்றுள்ளதுடன் இரகசிய கண்காணிப்பு கமராவின் சேமிப்பகத்தையும் தூக்கிச்சென்றுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த வைத்தியர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.