
இரத்தினபுரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று.!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட்19 தொற்றுறுதியானவர்களில் அதிகளவானோர் இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
அந்த மாவட்டத்தில் நேற்றைய தினம் மாத்திரம் 62 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக கொவிட்19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 59 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 51 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 50 பேருக்கும் கொழும்பு மாவட்டத்தில் 40 பேருக்கும், நேற்றைய தினம் தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் மாத்தறை மாவட்டத்தில் 35 பேருக்கும், காலி மாவட்டத்தில் 21 பேருக்கும், பதுளையில் 16 பேருக்கும், நுவரெலியாவில் 12 பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதேவேளை, ஹப்புத்தளை நகரில் உள்ள விருந்தகம் ஒன்றின் மேலும் ஒரு பணியாளருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
கடந்த 25 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டிருந்த பி.சி.ஆர் பரிசோதனையின் பெறுபேறுக்கு அமைய அவருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர் ரோய் விஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஹல்துமுல்ல பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவருக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதுடன் குறித்த விருந்தகம் இன்றில் இருந்து 14 நாட்களுக்கு மூடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.