
14 பெண்களை காதல் வலையில் வீழ்த்திய டகாடக் இளைஞர்.. வைச்சு செய்த காதலிகள்; வெளியான பகீர் ஆடியோக்கள்!
குடும்பப் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களுடன் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு பிளாக்மெயில் செய்து, 3 வருடங்களாக பணம் பறித்து வந்த கால்டாக்ஸி ரோமியோ கார்த்தியை,
அவனிடம் சிக்கிய பெண்கள் ஒருவர் மாற்றி ஒருவர் செல்போனில் வறுத்தெடுத்த ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு டிக்டாக்கிற்குள் நுழைந்து வீடியோ பதிவிட்டு, தனது வீடியோவுக்கு கமெண்டடிக்க வரும் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்தவன் தான் இந்த கார்த்திக்.
அந்தவகையில் திருமணமான பெண்கள், ஐ.டி நிறுவன ஊழியர், அடகுக்கடை அதிபர் மனைவி, என கார்த்தியின் கைவரிசையால் முகவரி இழந்த பெண்கள் பலர் என்று கூறப்படுகின்றது.
டிக்டாக் தடை செய்யப்பட்டதால் இவன் டகாடக் என்ற செயலி மூலம் மீண்டும் காதல் சித்து விளையாட்டை தொடங்கியுள்ளான்.
இவனால் ஏமாற்றப்பட்ட 10க்கும் மேற்பட்ட பெண்கள் வாட்ஸ் அப் மூலம் ஒன்றிணைந்து களவாணி கார்த்தி எப்படி எல்லாம் பெண்களை காதலித்து ஏமாற்றினான் என்பதை பற்றி பகிர்ந்துகொண்டுள்ளனர்.
மேலும், போலியாக திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்கு கொடுத்த இவன், பெண்களை வீடியோ எடுத்து பணம் பறித்து வந்துள்ளான்.
இதனால், பாதிக்கப்பட்ட பெண்கள் மட்டுமல்ல இவனது லீலைகளை கண்டு கொதித்து போன ஆண்களும் எச்சரித்துள்ளனர்.
போதுமான அளவு ஆடியோ வீடியோ ஆதாரங்கள் பிரபல சேனலுக்கு கிடைத்த நிலையிலும், கார்த்தி மீது நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.