மகளிர் கிரிக்கெட் உயர் செயல்திறனுக்கான பிரத்தியேக மையம்
ஒரு பிரத்தியேக மகளிர் கிரிக்கெட் உயர் செயல்திறன் மையம் ஒன்றை நிறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் திறனை அதிகரிக்கும் நோக்கில் இந்த செயல் திறன் மையம் நிறுவப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பி.சரவணமுத்து விளையாட்டரங்கில் இந்த மகளிர் கிரிக்கெட் உயர் செயல் திறன் மையம் நிறுவப்படவுள்ளது.
தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் தடகள கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்ட பின்னர் இந்த மையத்தை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது