45 கிலோ ஹெரோயினுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது

45 கிலோ ஹெரோயினுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது

ஹொரணையில் சிற்றூர்ந்து ஒன்றில் கொண்டுசெல்லப்பட்ட 45 கிலோ 376 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை, பாணந்துறை மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

அந்தப் பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, குறித்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டுசென்ற, இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற லான்ஸ் கோப்ரல் ஒருவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை, போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திற்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.