
சிங்கப்பூரில் வீட்டு பணிப்பெண்ணை அடித்து கொலைசெய்த இந்திய வம்சாவளி பெண் கைது!
சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் மியன்மார் நாட்டை சேர்ந்த தனது வீட்டுப் பணிப்பெண்ணை கொலை செய்துள்ளார்.
ஏழ்மை காரணமாகவும், தனது 3 வயது மகனை காப்பாற்றவும் குறித்த பெண் கடந்த 2015 ஆம் ஆண்டு வீட்டு வேலைக்களுக்காக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பணிபெண்ணாக இருந்த மியன்மார் பெண் திடீரென உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான தகவல் அறிந்த போலீசார் அப்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அவரது உடலில் 31 தளும்புகளும், 47 வெளிப்புற காயங்கள் இருந்தமை பிரேத பரிசோதனைகளின்போது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வீட்டு எஜமானியான பெண்ண காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் தான் பெண்ணை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
மியன்மார் பெண் வீட்டு வேலைக்கு சேர்ந்து 5 மாதங்களுக்கு பிறகு அவரை வீட்டு எஜமானியான பெண் சித்திரவதைக்கு உட்படுத்த தொடங்கியுள்ளார்.
அவரை பட்டினி போட்டு அடித்து உதைத்துள்ளதுடன் தொடர்ந்தும் இதுபோன்ற சித்திரவதைகளை செய்துள்ளார். இதில் மூளையில் காயம் அடைந்து இறந்துள்ளார்.
இறக்கும் போது அப்பெண்ணின் உடல் நிறை 24 கிலோகிராமா மட்டுமே இருந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளி பெண் மீதான 28 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் மீது 87 குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.