முஸ்லிம்களின் சரீரம் எரிப்பு விவகாரம் மனித உரிமைகள் பேரவையில் ஒலிப்பு!

முஸ்லிம்களின் சரீரம் எரிப்பு விவகாரம் மனித உரிமைகள் பேரவையில் ஒலிப்பு!

மரணிக்கின்ற முஸ்லிம்களின் சரீரம் புதைக்கப்பட வேண்டும் என்ற நம்பிக்கைக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என்று, இஸ்லாமிய ஒத்துழைப்பு ஒழுங்கமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

அதன் பொதுச்செயலாளர் கலாநிதி யூசுப் அல் ஒதாமீன் Yousef Al Othaimeen 46 மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் உரையாற்றும் போது இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையில் கொவிட்19 நோயால் மரணிக்கின்றவர்களின் சரீரங்கள் தகனம் செய்யப்படுகின்றன.

முஸ்லிம்களது சரீரங்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று நம்புகின்ற நிலையில், இலங்கை அரசாங்கம் அந்த உரிமையை மதித்து செயற்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்