வீட்டின் நிதி நிர்வாகத்தை சரியான முறையில் மேற்கொள்ள வழிகள்

வீடானாலும் நாடானாலும் நிதி நிர்வாகத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகி விடும். வீட்டின் நிதி நிர்வாகத்தை சரியான முறையில் மேற்கொள்வதற்கு சில வழிமுறைகள்...

வீடானாலும் நாடானாலும் நிதி நிர்வாகத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகி விடும். வீட்டின் நிதி நிர்வாகத்தை சரியான முறையில் மேற்கொள்வதற்கு சில வழிமுறைகள்...

முதலீடு : திட்டமிடப்பட்ட ம்ற்றும் வழக்கமான முதலீடுகளை செய்வது மிக முக்கியமானது. வருமானத்திலிருந்து ஒரு பகுதியை முதலீடு செய்வதற்குபயன்படுத்த வேண்டும். அதிலிருந்து நமக்கு ஒரு சிறிய வருமானம் கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. நம்மால் முடிந்தவரை தங்கத்திலோ, மற்றவற்றிலோ முதலீடு செய்ய வேண்டும்.

 


நிதி இலக்கு : நிதி இலக்கு நிர்ணயித்து செயல்படுதல் வாழ்க்கையில் பல்வேறு அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு தேவையான பணத்தை சேமிப்பதற்கு உதவி செய்யும். குழந்தைகளின் கல்வி, திருமணம் அல்லது குடும்பத்துடன் வெளிநாட்டு பயணம் போன்றவற்றுக்கு நிதி இலக்குகளை அமைத்து செயல்படுதல் அவசியமானது.

சேமிப்பு : சேமிப்பு என்பது நமது வருமானத்திலிருந்து எதிர்கால பயன்பாட்டிற்காக எதிர்பாராத தேவைகளுக்கு ஒரு தொகையை ஒதுக்குவது நமது சிறுவயதில் நம் அம்மா, பாட்டி போன்றவர்கள் சமையல் அறையில் சிறு உண்டியல் வைத்து சேமிப்பதை பார்த்திருப்போம். தேவையான தருணங்களில் அந்த பணம் மிகவும் உதவியாக இருந்திருக்கும். தற்போது சேமிப்பதற்கு பல வழிகள் உள்ளன. ஒவ்வொருவரும் சேமிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

கடன்கள் : முடிந்தவரை கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இருக்கும் கடன்களை அடைப்பதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். சிறு சிறு கடன்களையும, வட்டிக்தொகை சேரும் கடன்களையும், முதலில் அடைத்தல் நல்லது. கடன் அட்டைகளை கூடியவரை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

அவசரகால நிதி : வருமானத்தில் ஒரு பகுதியை அவசர கால நிதியாக ஒதுக்கி வைத்தல் முக்கியமானது. இநத நிதி நாம் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் தேவைகளுக்கு கைக்கொடுக்கும். இதனால் நிதிப்பற்றாக்குறை காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தை தவிர்க்கலாம்.