
15,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானம் தீப்பற்றியது
அமெரிக்காவின் டென்வர் நகரில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் நடுவானில் தீப்பற்றியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
டென்வர் நகரில் இருந்து சனிக்கிழமை பிற்பகல் ஹொனலுலு நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது.
இந்த விமானத்தில் 231 பயணிகளும் 10 விமான ஊழியர்களும் பயணம் செய்துள்ளனர்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் 15 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது ஒரு என்ஜினில் தீப்பிடித்துள்ளது.
இதனால் விமானம் உடனடியாக டென்வர் விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமான நிலையத்தில் மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
எனினும் வரும் வழியிலேயே விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட தீ வேகமாக பரவியதால் சில பாகங்கள் உடைந்து தரையில் விழுந்துள்ளன.
என்ஜினில் பற்றிய தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.