வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்த 1504 பேர்

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்த 1504 பேர்

இன்று காலை 8.30துடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், கட்டுநாயக்க விமான நிலையத்தில், 1,504 பயணிகளுக்கு விமான சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

22 விமான சேவைகள் ஊடாக அவர்களுக்கான சேவைகள் வழங்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில், 12 விமான சேவைகள் ஊடாக 943 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதேநேரம், 10 விமான சேவைகள் மூலம் 561 பயணிகள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.