ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண்! நெஞ்சை பதை பதைக்க வைக்கும் அதிர்ச்சி காட்சி... இறுதி நொடியில் நடந்த அதிசயம்!

ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண்! நெஞ்சை பதை பதைக்க வைக்கும் அதிர்ச்சி காட்சி... இறுதி நொடியில் நடந்த அதிசயம்!

ரயில் புறப்பட்ட நேரத்தில் ரயில்வே தண்டவாளத்தில் சிக்கி கொண்ட பெண் தண்டவாளத்திலேயே படுத்து உயிர்தப்பிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரயில் சிக்கனல்காக காத்திருந்தபோது ஒரு பெண், ரயில்வே தண்டவாளத்தில் அடுத்த பிளாட்பார்மிற்கு செல்வதற்காக நடந்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ரயிலை எடுத்துவிட்டதால் அந்த பெண் அதிர்ச்சியடைந்து நின்று விட்டார்.

அப்போது அங்கு நின்றவர்கள் பலர் அப்படியே அங்கு படுக்கும்படி கூறினர். இதனையடுத்து ரயில் மெதுவாக நகரும்போது அந்த பெண் ரயில்வே தண்டவாளத்தில் படுத்துக் கிடப்பதை வீடியோவில் காணலாம்.

பின்னர் ரயில் கடந்து சென்ற பின் அந்த பெண் அதிஷ்டவசமாக உயிருடன் எழுந்திருக்க முயன்றார். அப்போது அங்கு இருந்த பலர் ஓடி சென்று அவரை பாதுகாப்பாக தூக்கி எழுந்து நிற்க உதவுகின்றனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளதாக செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது.