சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் தகைமை தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ளது

சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் தகைமை தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ளது

சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் தகைமை தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நாளைய தினம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

கொவிட்-19 உலகப் பரவல் தொற்று காரணமாக, வரலாற்றில் முதல் முறையாக ஜெனிவா கூட்டத்தொடர் இணையதளம் ஊடாக இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தில் தலையிடுவதற்கு சில மேற்குலக நாடுகளும், சில அமைப்புகளும் எதிர்பார்க்கின்றன.

அவற்றிற்கு தெரியாத யதார்த்தங்களையும், காரணிகளையும் முன்வைப்பதற்கு இலங்கை அரசிற்கும் இயலுமாக உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.