அர்ஜுன் டென்டுல்கர் திறமை அடிப்படையிலேயே அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார் - மஹேல ஜயவர்தன

அர்ஜுன் டென்டுல்கர் திறமை அடிப்படையிலேயே அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார் - மஹேல ஜயவர்தன

அர்ஜுன் டென்டுல்கர் திறமை அடிப்படையிலேயே அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

14வது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலம் நேற்று முன்தினம் இடம்பெற்றிருந்தது.

அதில் இந்திய ரூபாவில் 2 மில்லியனுக்கு சச்சின் டென்டுல்கரின் மகன் அர்ஜுன் டென்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துக்கொண்டது.

புதுமுக வீரர் என்பதால் வேறு எந்தவொரு அணியும், அவரை ஏலத்தில் எடுத்துக்கொள்ளாத நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தமை பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு, பதிலளித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மஹேல ஜயவர்தன, அர்ஜுன் திறமை அடிப்படையிலேயே அணிக்குள் உள்வாங்கப்பட்டார் என குறிப்பிட்டார்.

இது அவரை மேம்படுத்திக்கொள்வதற்கு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் எனவும் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.