காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் உப காவல்துறை பரிசோதகர் விளக்கமறியலில்...

காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் உப காவல்துறை பரிசோதகர் விளக்கமறியலில்...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் டீ-56 ரக தோட்டாக்கள் 15ஐ எடுத்து செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் கைதான காவல்துறை போதை பொருள் ஒழிப்பு பிரிவின் உப காவல்துறை பரிசோதகர் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று முற்பகல் 10.40 அளவில் குறித்த தோட்டாக்களுடன் விமானநிலையத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் விமான நிலைய பாதுகாப்பு பிரிவினரால் சந்தேகநபரான உப காவல்துறை பரிசோதகர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் கட்டுநாயக்க விமானநிலையத்தின் காவல்துறை போதைபொருள் ஒழிப்பு பிரிவில் பணியாற்றியவர் என காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது