ஜனாதிபதி தெரிவித்துள்ள பொசன் பௌர்ணமி வாழ்த்துச் செய்தி
இன்று பொசன் பௌர்ணமி தினமாகும்.
இந்த நிலையில் ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது தமது நம்பிக்கையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு தற்போது முகம்கொடுத்துள்ள நோய்த்தொற்றுக்கு மத்தியிலும் கூட நாம் பண்பாட்டின் அடிப்படையிலான தத்துவத்திலிருந்து விலகிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.