தியத்தலாவையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்றுறுதி

தியத்தலாவையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்றுறுதி

தியத்தலாவையில் மேலும் 7 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

ஹப்புத்தளை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சுதர்ஸன் இதனை தெரிவித்துள்ளார்.

15 ஆம் திகதி மேற்கொள்ளபட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளிலேயே அவர்களுக்கு இவ்வாறு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், 6 கடைகளும் 28 வீடுகளிலும் உள்ள 122 பேர் தனிமைப்படுத்தப்பட்டதாக ஹப்புத்தளை பொதுசுகாதார பரிசோதகர் எஸ் சுதர்ஸன் தெரிவித்தார்