சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்!

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று இரண்டாவது நாளாகவும்  தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இராணுவ வைத்தியசாலையில் குறித்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்றைய தினம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இந்த தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் 19 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.