மேல் மாகாணத்தில் 57,000 பேருக்கு இன்று கொரோனா தடுப்பூசி!
மேல் மாகாணத்தில் இன்றைய தினம் 57,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகின்றன.
பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண இதனை தெரிவித்துள்ளார்.
30 வயது முதல் 60 வயதுக்கிடைப்பட்டோருக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 27,018 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 11,710 பேருக்கும், கம்பஹாவில் 17, 622 பேருக்கும் இன்று தடுப்பூசிகளை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தை பொருத்தவரையில் கொலன்னாவை, கொத்தட்டுவை, மொரட்டுவை, ஹங்வெல்ல மற்றும் எகடஉயன சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும், களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை, பண்டாரகம, மத்துகம, பாணந்துறை, ஹொரணை, பேருவளை மற்றும் களுத்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பொதுமக்களுக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் கம்பஹா, அத்தனகல்ல, நீர்கொழும், சீதுவ, மஹர, பியகம, வத்தளை, மினுவாங்கொடை, ராகமை, ஜா-எல மற்றும் களனி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண குறிப்பிட்டுள்ளார்.