
வட மாகாண சூரிய சக்தி மின்நிலையங்களை அமைக்கும் பொறுப்பை சீன நிறுவனங்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி
வட மாகாணத்தில் உள்ள 3 தீவுகளில் சூரிய சக்தி மின்நிலையங்களை அமைப்பதற்காக சீன நிறுவனங்களுக்கு வழங்கும் தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி பதில் அளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி பத்திர அடிப்படையில் வடக்கில் உள்ள மூன்று தீவுகளில் சூரிய சக்தி மின்நிலையங்களை அமைப்பதற்காக சீனா நிறுவனங்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த தீர்மானத்தை மீளபெறுவதற்கு அல்லது இரத்து செய்வதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரால் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே இந்த தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்