கொரோனாவுக்கு மத்தியிலும் நாட்டின் அபிவிருத்திகள் தடையின்றி தொடரும் - பிரதமர்

கொரோனாவுக்கு மத்தியிலும் நாட்டின் அபிவிருத்திகள் தடையின்றி தொடரும் - பிரதமர்

கொவிட்-19 வைரஸ் பரவலின் மத்தியிலும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடையின்றி தொடரும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாண கால்வாய் திட்டத்தின் கட்டுமாணப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் ஆரோக்கியமான மக்கள் தொகையை உருவாக்குவதற்கும், உள்ளூர் உற்பத்திகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்குமான நடவடிக்கையையே அரசாங்கம் மேற்கொள்கின்றது.

யுத்தத்தின் போது கூட நாங்கள் நாட்டை அபிவிருத்தி செய்தோம்.

அதேபோல கொவிட்-19 தொற்றுக்கு மத்தியிலும் அபிவிருத்திகளை நிறுத்த மாட்டோம்.

நோய்வாய்ப்பட்ட உலகத்தின் மத்தியில் ஆரோக்கியமான அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்