
இறக்குவானை மற்றும் கொடகவெல ஆகிய நகரங்களில் வங்கிப் பணியாளர்கள் இருவருக்கு கொரோனா
இறக்குவானை மற்றும் கொடகவெல ஆகிய நகரங்களில் உள்ள இரண்டு வங்கிகளின் பணியாளர்கள் இருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
இதனையடுத்து அந்த வங்கிகளில் சேவை புரிந்த 35 பணியாளர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேநேரம் ஹட்டன் பகுதியில் அமைந்துள்ள பிரதான சர்வதேச பாடசாலையொன்றின் ஆசிரியை ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானது.
இதன் காரணமாக அந்த பாடசாலை இன்றைய தினம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தொற்றுறுதியான ஆசிரியை வலப்பனை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது