நாட்டினுள் தற்போது ஒளடதங்களுக்கான பற்றாக்குறை இல்லை - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன

நாட்டினுள் தற்போது ஒளடதங்களுக்கான பற்றாக்குறை இல்லை - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன

நாட்டினுள் தற்போது ஒளடதங்களுக்கான பற்றாக்குறை இல்லை என ஒளடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அரச ஒளடத கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிமோடிபின் ஒளடத்தை சந்தைக்கு விநியோகிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்தளவான ஒளடதங்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் ஒளடதங்கள் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருவதில் சிறிது காலதாமதம் இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்