கனிய எண்ணெய் கூட்டுத்தாபன நிதி நெருடிக்கடிக்கு தீர்வு

கனிய எண்ணெய் கூட்டுத்தாபன நிதி நெருடிக்கடிக்கு தீர்வு

கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தால் வெளிநாட்டு சந்தைகளில் இருந்து நேரடியாக அந்நிய செலாவாணியை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.

கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் முகம் கொடுத்துள்ள நிதி நெருடிக்கடிக்கு தீர்வாக மத்திய வங்கியின் அனுமதியின் கீழ் குறித்த கொள்வனவு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்