இபலோகம ஆடைத் தொழிற்சாலை ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டது

இபலோகம ஆடைத் தொழிற்சாலை ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டது

கொரோனா தொற்றுக்குள்ளான ஐவர் கண்டறியப்பட்டதையடுத்து இபலோகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் ஐவரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகினர்.

இதற்கு முன் இங்கு பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனைகளின் போதே மேற்படி தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்