மோடியின் கருத்துக்காக காத்திருக்கும் இலங்கை அரசு

மோடியின் கருத்துக்காக காத்திருக்கும் இலங்கை அரசு

இலங்கையில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஒருவர் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் இந்திய பிரதமரின் பதிலளிப்பையடுத்து அரசாங்கம் தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் என அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்றைய தினம் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்து வெளியிடப்பட்டு இரண்டு நாட்கள் மாத்திரமே கடந்துள்ளன.

இது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி அல்லது அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

அவர்கள் இந்த கருத்தை ஏற்றுக்கொள்கின்றார்களா அல்லது நிராகரிக்கின்றார்கள் என்பது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல் வெளியாதன் பின்னர் அது குறித்து அரசாங்கம் தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் என அமைச்சர் உதய கம்மன்பில் தெரிவித்துள்ளார்