
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கை
மன்னார் முதல் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரையை அண்மித்த கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்பகுதிகளில் 2 முதல் 2.5 மீற்றர் அளவில் கடல் அலையானது மேல் உயரக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அந்த கடற்பகுதிகளில் உள்ள மீனவர்களையும், கடற்றொழிலாளர்களையும் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது