இலங்கை தற்போது முழுமையாக சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது - சந்திரிகா

இலங்கை தற்போது முழுமையாக சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது - சந்திரிகா

இலங்கை தற்போது முழுமையாக சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

மறைந்த விஜயகுமாரதுங்கவின் 33ஆவது நினைவுதின நிகழ்வில் கலந்து கொண்டதையடுத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

சீதுவயில் அமைந்துள்ள விஜயகுமாரதுங்கவின் நினைவுச் சிலைக்கு அருகில் இன்று (16) இந்நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றதோடு முன்னாள் ஜனாதிபதி அதற்கு மலரஞ்சலி செலுத்தினார்.