பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் சுகாதார அமைச்சர்

பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் சுகாதார அமைச்சர்

கொரோனா தொற்றுக்குள்ளாகி ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியிருப்பதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி 23ம் திகதி இவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து ஹிக்கடுவையிலுள்ள விடுதியொன்றில் தனிமைப்படுத்தப்பட்ட அமைச்சர் கொத்தலாவல பாதுகாப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததோடு அதன் பின் மேலதிக சிகிச்சைகளுக்காக ஐ.டி.எச். வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.