
சுகாதாரத்துறைக்கு பதில் அமைச்சரை நியமித்தார் கோட்டாபய
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் பதில் சுகாதார அமைச்சராக பேராசிரியர் சன்ன ஜெயசுமன நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் அவர் பதவியேற்றார்.
சன்ன ஜெயசுமன மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை ராஜாங்க அமைச்சராக தற்போது உள்ளார்.
இதேவேளை ரொஷான் ரணசிங்க மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் முன்னர் நில மேலாண்மை, பொது நிறுவனங்கள், நிலங்கள் மற்றும் சொத்து மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவியை வகித்தார்.
ரணசிங்க புதிய இராஜாங்க அமைச்சராக இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்.