அத்தியாவசிய சேவையாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுப்பு

அத்தியாவசிய சேவையாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுப்பு

பொருளாதார மேம்பாட்டிற்கு பெரிதும் ஒத்துழைக்கும் அத்தியாவசிய சேவையாளர்களுக்கு இந்த வாரத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதற்கமைய, விமான நிலைய பணியாளர்கள், துறைமுக ஊழியர்கள், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு  தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.