வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களிடமே உரு திரிபடைந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களிடமே உரு திரிபடைந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

உரு திரிபடைந்த கொவிட்-19 தொற்றுறுதியானவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்துள்ளதால் நாட்டினை முடக்குவதற்கு எந்தவொரு அவசியமும் இல்லை என ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய் மற்றும் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் மருத்துவ நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களிடமே உரு திரிபடைந்த வைரஸ் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

அத்துடன் உரு திரிபடைந்த கொவிட்-19 சில இடங்களிலேயே அடையாளங்காணப்பட்டுள்ளது.

எனவே அந்த பகுதிகளில் மாத்திரம் பயணக்கட்டுப்பாடுகளை விதித்து வைரஸ் பரவலை தடுக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்