முன்மொழியப்பட்டுள்ள சட்ட திருத்தங்களை விரைவுபடுத்துமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஸ பணிப்புரை

முன்மொழியப்பட்டுள்ள சட்ட திருத்தங்களை விரைவுபடுத்துமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஸ பணிப்புரை

மாநகர சபைகள், நகர சபைகள் கட்டளைச் சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை விரைவுபடுத்துமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த திருத்தங்களை மேற்கொள்ள தயாராகவிருப்பதாகவும் அதற்கான அமைச்சரவை பத்திரத்தை ஒரு சில தினங்களில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை, ஊதிய ஆணைக்குழு, நிர்வாக சேவைகள் திணைக்களம், விலை மதிப்பு திணைக்களம், ஆகிவற்றுடனான சிக்கல்கள் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் இதன்போது பிரதமருக்கு விளக்கமளித்துள்ளனர்