மீன்களை கொண்டு செல்லும் போர்வையில் நாட்டுக்குள் கடத்தப்படவிருந்த 1,000 கிலோ மஞ்சள் பறிமுதல்!

மீன்களை கொண்டு செல்லும் போர்வையில் நாட்டுக்குள் கடத்தப்படவிருந்த 1,000 கிலோ மஞ்சள் பறிமுதல்!

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்திவரப்பட்ட 1, 164 கிலோகிராம் உலர் மஞ்சள் வென்னப்புவ, மாஓயா பிரதேசத்தில்வைத்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மஞ்சள் பொதிகள் இரு படகுகளில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள அதேவேளை, அதிகுளிரூட்டியுடன் கூடிய பாரஊர்தி ஒன்றில் மீன்களை கொண்டுசெல்லும் போர்வையில் கடத்திச் செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேற்படி மஞ்சளை பொதியிட்டதாகக் கூறப்படும் சிலாபம் மற்றும் நீர்கொழும்பைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.