கொழும்பில் இருவரின் இரத்தத்தில் புதிய வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது! மக்களுக்கு எச்சரிக்கை

கொழும்பில் இருவரின் இரத்தத்தில் புதிய வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது! மக்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு நகரில் உள்ள இரண்டு நோயாளிகளில் கொவிட் -19 வைரஸின் புதிய மாறுபாடு அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொழும்பு நகரசபையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ருவன் விஜயமுனி இதை தெரிவித்தார்.

மக்கள் தொடர்ந்து சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் இருந்தால் கோவிட்டின் 3 வது அலை ஏற்படுவதைத் தடுப்பது கடினம் என்று டாக்டர் ருவன் விஜயமுனி எச்சரித்துள்ளார்.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் நடத்திய சோதனைகளின்படி,

கொழும்பில் உள்ள இரண்டு நோயாளிகளின் இரத்த பரிசோதனைகளில் கோவிட் -19 வைரஸின் மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, கோவிட்டின் இரண்டாவது அலைகளை எங்களால் நன்றாக கட்டுப்படுத்த முடிந்தது. எனினும் இது கடினமாக இருக்கலாம்.

மூன்றாவது அலைகளைத் தடுக்க மக்கள் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.