அதிகாரிகளுக்கு கோட்டாபய விடுத்துள்ள உத்தரவு

அதிகாரிகளுக்கு கோட்டாபய விடுத்துள்ள உத்தரவு

கொவிட் 19 வைரஸுக்கு எதிரான அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை இன்று (15) முதல் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கை ஆரம்ப கட்டமாக மேற்கு மாகாணத்தில் தொடங்கி, கொவிட் 19 வைரஸ் அதிக ஆபத்துள்ள பகுதி மக்களுக்கு போடப்படும்.

இதற்கிடையில், தடுப்பூசி நேற்றுடன் (14) 189,349 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி வழங்கும் செயற்பாடு கடந்த ஜனவரி 29 ஆம் திகதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.