
சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு நாளை மறுதினம் முதல் கற்றல் விடுமுறை!
க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு முகங்கொடுக்கவுள்ள மாணவர்களுக்கு ஒருவார கற்றல் விடுமுறை வழங்குமாறு கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவினால் அனைத்து மாகாண, வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
2020 டிசெம்பரில் இடம்பெறவிருந்த க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் அதற்கு முகங்கொடுக்கும் மாணவர்களுக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் பெப்ரவரி 25 வரையில், கல்வி கற்பதற்காக விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது, பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரங்களை வழங்கும்போது, கற்றல் விடுமுறைக்கு பாதிப்பை ஏற்படாதவாறு செயற்படுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்