2500 கிலோ கழிவுத் தேயிலை தூளுடன் இருவர் கைது (படங்கள்)
சுமார் 2500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலவாக்கலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று (15) மதியம் 12 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கழிவுத் தேயிலை தூளானது அனுமதிப் பத்திரம் இன்றி கொட்டகலை பகுதியிலிருந்து கம்பளை பகுதிக்கு கொண்டு செல்லும் போது விசேட அதிரடிப்படையினரால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
அதன்பின் கைப்பற்றப்பட்ட கழிவுத் தேயிலை தூளுடன் சந்தேக நபர்களையும், போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும், திம்புள்ள - பத்தனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரையும் அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள - பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


