
மருதானை- டீன்ஸ் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த சிற்றூர்ந்து தீப்பற்றியது!
மருதானை - டீன்ஸ் வீதியிலுள்ள சுகாதார அமைச்சின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிற்றூர்ந்து ஒன்று இன்று(15) முற்பகல் தீப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீப்பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறை தெரிவித்தது.
தீப்பரவல் ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் மருதானை - டீன்ஸ் வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025