நேற்று 2,695 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன..!
நாட்டில் இதுவரை ஒரு 189,349 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
கடந்த 29 ஆம் திகதி முதல் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் நேற்றைய தினம் மாத்திரம் 2,695 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி செலுத்தப்பட்ட கடந்த 29 திகதி முதல் கடந்த 4 ஆம் திகதி வரையில் 146,327 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
எவ்வாறாயினும் கடந்த 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 9,983 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன