குழந்தைகளை பிச்சை எடுக்க அனுப்பிய இரு பெண்கள் கைது

குழந்தைகளை பிச்சை எடுக்க அனுப்பிய இரு பெண்கள் கைது

தமது குழந்தைகளை பிச்சைக்காரர்களாகப் பயன்படுத்தியதுடன், பாலியல் தொழிலில் ஈடுபட்ட இரண்டு பெண்களை அம்பலாங்கொட பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் 32 மற்றும் 26 வயதுடையவர்கள் என்று பொலிசார் தெரிவித்தனர்.

அவர்கள் இருவரும் இரு குழந்தைகளின் தாய்மார்கள், அவர்கள்,

அம்பலாங்கொட பகுதிக்கு குழந்தைகளை பிச்சை எடுக்க அனுப்பிவிட்டு இவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து குறித்த பெண்களும் அவர்களது நான்கு குழந்தைகளும் பலபிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

பிணை வழங்கியதைத் தொடர்ந்து, 22 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.