
கொரோனா அச்சம் காரணமாக நாடு முடக்கப்படுமா..? இராணுவ தளபதி விளக்கம்
நாட்டை மீண்டும் முடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களில் எவ்வித உண்மை தன்மையும் இல்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இராணுவ தளபதி விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரு திரிபடைந்த கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்கள் கண்டறியப்பட்டுள்ளதால் நாட்டை முடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானங்கள் மேற்கொண்டிருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அந்த தகவலில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்பதுடன், நாட்டை மீண்டும் முடக்குவதற்கு அரசாங்கம் இதுவரையில் எந்தவொரு தீர்மானத்தையும் இதுவரை எடுக்கவில்லை என இராணுவ தளபதி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குறித்த வைரஸ் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.
பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளுக்கு அமைய எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இராணுவ தளபதி ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.