பாகிஸ்தானில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு
பாகிஸ்தானில் ஒரே நாளில் 4,072 பேர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,02,955 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 072 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அங்கு கொரோனாவால் ஒரே நாளில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 118 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 92 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பாகிஸ்தான் 12 வது இடத்தில் உள்ளது.