இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 04 பேர் காயம்

இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 04 பேர் காயம்

கொழும்பு - கண்டி வீதியில் பேலியகொடை - பட்டிய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாரவூர்தி ஒன்றும், பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி பின்னர் பேருந்து, முச்சக்கவண்டியில் மோதுண்டு இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்தில் பேருந்தின் சாரதியும், பாரவூர்தியின் சாரதியும், முசக்கரவண்டியின் சாரதியும் அதன் பின் ஆசனத்தில் பயணித்த ஒருவருமே காயமடைந்துள்ளனர்.