
சிங்கராஜ - வலகந்த வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடி வந்த 4 பேர் கைது
சிங்கராஜ - வலகந்த வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடி வந்த 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று மாலை முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து வேட்டையாடப்பட்டிருந்த 22 கிலோ கிராம் இறைச்சியும், துப்பாக்கி ஒன்றும், 11 இரவைகளும், மகிழுர்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதானவர்கள், ரக்வானை மற்றும் இரத்தினபுரி பகுதிகளை சேர்ந்தவர்களுடன் அவர்களில் தேயிலை தோட்டம் ஒன்றின் உரிமையாளரும், சேவையில் இருந்து விலகிச் சென்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது