கட்டடத் தொழிலாளி ஒருவர் தவறி வீழ்ந்து மரணம்!

கட்டடத் தொழிலாளி ஒருவர் தவறி வீழ்ந்து மரணம்!

கட்டுமான பணியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி வீழ்ந்து நபரொருவர் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் வெள்ளவத்தை இலக்கம் 17 ஹெம்டின் லேன் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.